தூத்துக்குடி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டது.
இம்மையத்தின் தென் மண்டல தலைவர் கூறுகையில், வரும் நவ.12ஆம் தேதி வரை குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடற்கரை பகுதிகள் தெற்கு ஆந்திரா, கடலூர், பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கொண்டு பகுதிகளில் நாளை முதல் 55 கி.மீ. வேகத்தில் இந்த பகுதியில் காற்று வீசக்கூடும்.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உட்பட மயிலாடுதுறை, திருவள்ளூர், தஞ்சை, நாகை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரை கடலுக்குச்செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இதையும் படிங்க: ஒகேனக்கலில் சட்டமன்ற குழு: மக்களுக்காக எம்எல்ஏ வைத்த கோரிக்கை