தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவர் கிராமத்தில் 'தூண்டில் பாலம்' அமைக்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என மீனவர்கள் இன்று (பிப்.20) அறிவித்துள்ளனர்.
அமலி நகர் மீனவ கிராமத்தில் சுமார் 192 பைபர் படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் இந்த பகுதி மக்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருவது வழக்கம். அவ்வாறு மீன் பிடிக்கச் செல்லும்போதும், மீன்பிடித்துத் திரும்பும்போதும் தூண்டில் பாலம் இல்லாததால் படகுகள் சேதம் அடைந்தும் உயிர்ச் சேதம் ஏற்படுவதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்து வந்தனர். மேலும், அமலி நகரில் உடனடியாக தூண்டில் பாலம் அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அமலி நகர் மீனவ மக்கள் கோரிக்கை குறித்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 2022-23 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அமலிபுரத்திற்கு தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்காக ரூ.84 கோடி செலவு திட்டமும் தயாரிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது.