தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலில் கலக்கும் அனல் மின்நிலைய கழிவுகள்; அழியும் மீன்வளம்..

தூத்துக்குடி அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் அழிவதாக, மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் தெரிவித்தனர்.

அனல் மின்நிலைய கழிவுகளால் மீன்வளம் அழிவதாக மீனவர்கள் வேதனை
அனல் மின்நிலைய கழிவுகளால் மீன்வளம் அழிவதாக மீனவர்கள் வேதனை

By

Published : Nov 4, 2022, 5:55 PM IST

தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் பல மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.

இதில், தென்பாகம் நாட்டுப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பன் கூறுகையில், 'கடற்கரை அருகில் உள்ள தெர்மல் பவர் பிளாண்ட், அனல் மின் நிலையம் ஆகிய தொழிற்சாலை சாம்பல் கழிவுகள் கடலில் கலப்பதினால் மீன், நண்டு, இறால் போன்ற மீன்வளம் அழிந்து விடுகிறது. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுகிறது.

அனல் மின்நிலைய கழிவுகளால் மீன்வளம் அழிவதாக மீனவர்கள் வேதனை

ஆகவே, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் தூத்துக்குடி மாணவன் சாதனை

ABOUT THE AUTHOR

...view details