தூத்துக்குடி: மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் வரும் பத்தாம் தேதிவரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், பைபர் படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியதா? மீனவர்கள் கூறுவது என்ன..?
தூத்துக்குடி, கடற்கரையில் கடல் உள்வாங்கியது என சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் உண்மை அல்ல, மக்கள் பீதியடைய வேண்டாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்வாங்கிய கடல்
இதனையடுத்து, புயல் காரணமாக தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது முற்றிலும் தவறானது எனவும், இங்கு கடற்கரையில் இருந்து மேல் பகுதி (களிமுக பகுதி) ஆகவே, அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் வழக்கமாக இந்த பகுதியில் தண்ணீர் குறைந்து காணப்படும் ஆகவே, மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:Mandus cyclone update: சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் ரத்து!