தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசைப்படகுகள் பதிவு செய்யப்படாததை கண்டித்து மீனவர்கள் முற்றுகை போராட்டம் - விசைப்படகுகள்

தூத்துக்குடி: விசைப்படகுகளை பதிவு செய்யக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் முற்றுகை போராட்டம்

By

Published : Apr 1, 2019, 9:57 PM IST

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை இறங்குதளமாக கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கசென்று வருகின்றன.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்றும், பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் கடலுக்கு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

விசைப்படகுகள் பதிவு செய்யப்படாததை கண்டித்து மீனவர்கள் முற்றுகை போராட்டம்

இதை தொடர்ந்து பதிவு செய்யப்படாத விசைப்படகு உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக மீன்பிடிக்ககடலுக்குசெல்லவில்லை. மேலும் தங்களது விசைப்படகுகள் முறைப்படி பதிவு செய்யவேண்டும் எனக்கோரி மீனவர்கள் தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்று மீன்வளத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details