தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவ பொது பஞ்சாயத்தார் சார்பில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக மீனவர்கள் சார்பில் கயஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 2020, மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியது. இந்த சட்ட விதி முறைப்படி மீனவர்கள் கடலுக்கு எப்பொழுது செல்ல வேண்டும், எங்கே செல்கிறார்கள், எவ்வளவு நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்க செல்கின்றனர், எந்த வகை மீன்களை பிடிக்கச் செல்கின்றனர் என்ற விவரத்தை அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய மீனவர்கள் கோரிக்கை இவை அனைத்தும் நடைமுறைக்கு ஒத்துவராது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கக்கூடியதாகவும் உள்ளது. எனவே, தேசிய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். மேலும், மீனவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மானிய முறையிலான மண்ணெண்ணெய் வழங்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பதையும் அரசிடம் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சென்னை காவல்துறை குதிரைப்படை ஊழியர்கள் முறையாக நடத்தப்படுகிறார்களா?