தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டதால், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்தனர். மேலும், கூட்டத்தை பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் புறக்கணித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். அதனால் கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த கெபிஸ்டன் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டமானது நடைபெறுகிறது. அதேபோல், அந்த கூட்டமும் வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது” என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் - அதிமுகவினர் சபாநாயகரிடம் கடிதம்!