தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையில்லாச் சான்றிதழ் வழங்க லஞ்சம் - தீயணைப்புத் துறை அலுவலர் கைது! - fire department officer arrested for getting bribery from farmer

தூத்துக்குடி: கோழி மற்றும் ஆட்டுப்பண்ணை அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த விவசாயிடம் லஞ்சம் வாங்கிய தீயணைப்புத் துறை அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்

fire department officer arrested for getting bribery from farmer

By

Published : Nov 9, 2019, 7:35 AM IST

தூத்துக்குடி விக்டோரியா தெருவைச் சேர்ந்தவர் ரோலன். இவர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக பணியாற்றிவருகிறார். இவரிடம், கீழ வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுந்தர் என்பவர் கோழி மற்றும் ஆட்டுப் பண்ணை அமைப்பதற்காகத் தடையில்லாச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

தடையில்லாச் சான்றிதழ் வழங்க தீயணைப்பு அலுவலர் ரோலன் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சுந்தர், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சுந்தரிடம் ரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை கொடுத்து தீயணப்பு அலுவலரிடம் கொடுக்குமாறு கூறினர்.

அதன்படி சுந்தர் ரோலனிடம் பணத்தைக் கொடுத்தார். அந்த லஞ்சப்பணத்தை ரோலன் பெற்ற போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாகப் கைது செய்தனர்.

இதையும் படிங்க: முன்ஜாமின் கேட்டவருக்கு வித்தியாசமான முறையில் ஜாமின் வழங்கிய நீதிபதி!

ABOUT THE AUTHOR

...view details