தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த சௌந்தர் என்பவரின் மனைவி கற்பகம். அவருக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்துள்ளது. அதையடுத்து இன்று(ஏப்ரல் 18) மாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் கற்பகத்தை அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும்வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இருமல், சளி காரணமாக பெண் உயிரிழப்பு; கரோனா என மக்கள் அச்சம்
தூத்துக்குடி: கோவில்பட்டியில் இருமல், சளி காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார், அவருக்கு கரோனா பாதித்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அவர் கரோனா அறிகுறிகளுடன் உயிரிழந்ததால், அவரின் சளி மாதிரிகளை பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பிவைத்துள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்தால்தான் கரோனாவால் உயிரிந்தாரா என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உறவினர்கள், அப்பகுதிமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். அதையடுத்து அவர் வசித்தப்பகுதியில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:திருப்பூரில் 3 பேருக்கு கரோனா - 50 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை!