தூத்துக்குடி:தருவை குளத்தைச் சேர்ந்தவர் தனுஷ்மதி. இவர் தனக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த ஆக.31ஆம் தேதி அதிகாலை தருவைக்குளம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக தங்குகடலுக்குச் சென்றார். இவருடன், தருவை குளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் டைசன், மீனவர் ரோஷன், மைக்கேல், ராஜு, வெள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி, ஆறுமுகநேரியைச் சேர்ந்த சேது, ராஜ்குமார், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த அஜய், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த சேது என ஒன்பது மீனவர்கள் சென்றனர்.
மீன் பிடிக்க கடலுக்குச் சென்றவர்கள் இன்று (செப்.22) அதிகாலை சுமார் 4 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். விசைப்படகானது தருவைக்குளம் கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் திருநெல்வேலி மாவட்டம், உவரி கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது.