தூத்துக்குடி அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (47). இவர் தனது 16 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவரது நண்பரான எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த தங்கமுருகன் (23) என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை போக்சோவில் கைது - தூத்துக்குடி குற்றச் செய்திகள்
தூத்துக்குடி : மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
![மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை போக்சோவில் கைது Father arrested for sexually assaulting daughter](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:10:28:1595986828-tn-tut-01-pocso-act-arrest-vis-script-7204870-29072020002810-2907f-1595962690-399.jpg)
Father arrested for sexually assaulting daughter
இதையறிந்த பெண்ணின் தாயார், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் வனிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தலைமறைவாக உள்ள தங்க முருகனை காவல்துறையினர் தேடி வருகி்ன்றனர்.