தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி இருவர் பலி - கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி இருவர் பலி

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fatel-accident-by-government-bus-in-kovilpatty
fatel-accident-by-government-bus-in-kovilpatty

By

Published : Feb 12, 2020, 7:42 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலப்பேரி பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற சவலபேரியைச் சேர்ந்த ராஜகோபால், ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இதையடுத்து கயத்தார் காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பஸ் மோதி இருவர் பலி

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் சு. சங்கரேஸ்வரனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி முருகனிடமிருந்து மீண்டும் தங்க நகைகள் பறிமுதல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details