தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தை: ஆத்திரத்தில் கொலை செய்த மகன்கள்!

தூத்துக்குடி: தட்டார்மடம் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை கொலை செய்த மகன்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தை கொலை
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தை கொலை

By

Published : Aug 17, 2020, 3:18 PM IST

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள உசரத்து குடியிருப்பைச் சேர்ந்தவர் துரை (48). கூலி தொழிலாளியான இவருக்கு செல்வம் என்ற மனைவி, ஜெகன் (21), சிவா (19) என்ற இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஏற்கனவே சென்ற மாதம் மனைவி செல்வத்தை தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற அவரது மகன்களையும் அரிவாளால் தாக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மனைவி, இரண்டு மகன்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (ஆக.17) காலை மீண்டும் துரை குடிபோதையில் மனைவியிடம் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது அவரது மகன்கள் அவரை தடுக்க முயன்றுள்ளனர். அதனால் தந்தை, மகன்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகன்கள் கட்டையால் தாக்கியதில் துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தட்டார்மடம் காவல்துறையினர் துரையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இரண்டு மகன்களை கைது செய்தனர்.

இதினிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவயிடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: விசிக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details