தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி, ”விவசாயிகளுக்குத் தொடர்ந்து கட்டணமில்லா உரிமை மின்சாரம் வழங்க வேண்டும். 1 ஹெச்.பி.க்கு 20 ஆயிரம் ரூபாய் என்ற புதிய மின்திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். விவசாயி ஒருவர் 3 ஹெச்பி வைத்து உபயோகித்து வந்தால் வருடத்திற்கு அவர் ரூ.60 ஆயிரம் செலுத்தினால்தான் விவசாயம் செய்ய முடியும்.
இதனால் மத்திய அரசு கொண்டுவரும் புதிய மின்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது. ஏற்கனவே, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. இடுபொருள்களின் விலை அதிகமாக உள்ளது. கூலியும் உயர்ந்துள்ளது.