தூத்துக்குடியில் வடகிழக்குப் பருவ மழை பெய்யாததால் பயிர்கள் பாதிப்படைந்ததாகக் கூறி வறட்சி நிவாரணம் வேண்டும் என தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து விவசாயி கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியைச் சுற்றி 2ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம், பாசிப் பயறு போன்றவைகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில், அனைத்து விவசாய பயிர்களும் பருவமழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் சேதமடைந்து விட்டன.