தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த விவசாயி சமுத்திரபாண்டி (60), அதே பகுதியில் அமைந்துள்ள பால்மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பாதுகாப்பில்லாமல் போடப்பட்டிருந்த மின் ஒயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
பால்மணியின் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் மோட்டார் அறையிலிருந்து நேரடியாக ஒயர் மூலம் இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஒயர், மோட்டார் அறையிலிருந்து ஆழ்த்துளை கிணறுவரையிலும் பாதுகாப்பில்லாத முறையில் தரையில் போடப்பட்டிருந்தது. அந்த ஒயரை கவனக்குறைவாக விட்டுள்ளனர்.
பால்மணியின் வயலில் சமுத்திரபாண்டி விவசாயப் பணிகளில் ஈடுபடும்போது, தண்ணீர் பாய்ச்ச வாய்க்கால் வெட்டினார். அப்போது ஒயரில் எதிர்பாராத விதமாக மண்வெட்டி பட்டுள்ளது. இதில் விவசாயி சமுத்திரபாண்டி மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.