தூத்துக்குடி மாவட்டம், ஆரோக்கியபுரம் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி முத்துக்குமார்(35). இவர் சிலுவைப்பட்டி சந்திப்பு வாட்டர் டேங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பான புகாரில் தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்குப்பதிவு செய்து ரவுடி முத்துக்குமாரை கைது செய்தார்.