தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி திருமண விழாவில் வெடி விபத்து - வீடுகள் சேதம்! - Explosion at wedding

தூத்துக்குடி மாவட்டம், தருவை குளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீடுகள் சேதமடைந்தன.

தூத்துக்குடி திருமண விழாவில் வெடி விபத்து - வீடுகள் சேதம்!
தூத்துக்குடி திருமண விழாவில் வெடி விபத்து - வீடுகள் சேதம்!

By

Published : Jun 27, 2022, 5:33 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியில், அந்தோணி குரூஸ் என்பவரது வீட்டுத் திருமண விழா இன்று (ஜூன் 27) காலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்நிகழ்வில், பட்டாசுகளும் வெடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பட்டாசு வெடிக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக வெடிகளில் மொத்தமாக தீப்பற்றியுள்ளது.

இதனால் வெடிகள் அனைத்தும் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வெடி போடும் தொழில் செய்து வரும் தாளமுத்து நகரைச் சேர்ந்த சிங்காரத்திற்கு இரு கைகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக, சிங்காரம் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதேநேரம், இந்த வெடி விபத்தின்போது அருகிலிருந்த மூன்று ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் ஒரு இருசக்கர வாகனமும் தீயில் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருவைகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண விழாவில் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த வெடி விபத்து, திருமண வீட்டார்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திருமண விழாவில் வெடி விபத்து - வீடுகள் சேதம்!

இதையும் படிங்க:'மத்திய அரசின் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்புங்க' எனப்பேசி மோசடி செய்த போலி ஆசாமி கைது!

ABOUT THE AUTHOR

...view details