தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிவடையும்!

தூத்துக்குடியிலிருந்து பெரிய அளவிலான விமானங்கள் இயக்குவதற்காக 280 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் அனைத்தும் வரும் 2023ஆம் செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள்
தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள்

By

Published : Jun 28, 2022, 10:13 PM IST

தூத்துக்குடி: விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் 280 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் மற்றும் நடைபெறவுள்ள பணிகள் குறித்த ஆலோசனைக்குழு கூட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் என்னென்ன மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் நிலை என்னென்ன பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன், 'விமான நிலையத்திலிருந்து முதற்கட்டமாக இரவு நேர விமானங்கள் இயக்கத்தேவையான அனைத்து ஒப்புதலும் பெறப்பட்டுள்ளன. விரைவில் இரவு நேர விமானங்கள் இயக்கப்படும். ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் வகையில் பயணிகள் முனையத்தை 16 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தும் பணி இன்று(ஜூன் 28) தொடங்கப்பட்டுள்ளது.

மும்பை, டெல்லி, கொல்கத்தா பகுதிகளுக்கு A 23 ரக விமானங்கள் இயக்குவதற்காக விமான நிலைய 1350 மீட்டர் நீள ஓடு பாதையை 3115 மீட்டர் நீளத்திற்கு 45 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும்' என்று கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள்

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் மற்றும் விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:வெறும் ரூ.7ஆயிரத்துக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதா? கோபத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details