தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 15 எல்லை பகுதிகளில் வருவாய்த்துறை, காவல் துறை, சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து வருவோர் அனைவரும் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று (மே 20) உறுதி செய்யப்பட்டது.