தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகளை அகழ்வாராய்ச்சியில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருள்கள் கண்டுபிடிப்பு - Excavations at Shivakalai have uncovered objects dating back 3000 years

தூத்துக்குடி: சிவகளை அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான அரிசி, நெல்மணிகள், தாடைகளுடன் சேர்ந்த பற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

sivakalai
sivakalai

By

Published : Sep 8, 2020, 1:55 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த மே 25ஆம் தேதி மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது.

இந்தப் பணியில் 10 தொல்லியல் அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் உள்பட சிவகளை பகுதியைச் சேர்ந்த 80 பொதுமக்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகளை பரம்புப் பகுதியில் 50 குழிகள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. இதில், தற்போது வரை 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள எலும்பு, பழங்காலப் பொருள்களை டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக எலும்புகளை சேகரிக்கும் பணி கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. கிடைத்த முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருள்களை எடுத்தபோது, அதில் நெல்மணிகள், அரிசி, தாடை எலும்புகள், தாடையுடன் சேர்ந்த பற்கள், பற்கள் எலும்புகள், சாம்பல் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன.

3000 ஆண்டுகள் பழமைவாய்நத நெல்மணிகள்

இதனை டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யும்போது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாக நமது பண்பாடு என்னதாக இருந்தது என்பது தெரியவரும் என்று ஆய்வாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details