முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்! - ஜெனிபர் சந்திரன் காலமானார்
தூத்துக்குடி: திருச்செந்தூரைச் சேர்ந்த முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவினால் இன்று காலமானார்.
Jenifer chandran
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரைச் சேர்ந்த ஜெனிபர் சந்திரன் திமுக ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து, மாநில மீனவரணி இணைச் செயலராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த மூன்றாண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.