தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு - Otapidaram

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முத்தையாபுரம் பகுதிக்குட்பட்ட பகுதியில் வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

முத்தையாபுரத்தில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதிரத்து மா.சுப்பரிமணியன் வாக்கு சேகரிப்பு

By

Published : May 14, 2019, 8:57 AM IST

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையா போட்டியிடுகிறார். இந்நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அவரை ஆதரித்து, சென்னை மாநகர முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் நேற்று முத்தையாபுரம் பகுதிக்கு உட்பட ஸ்பிக்நகர் அத்திமரப்பட்டியில் வீடு, வீடாகச் சென்று திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

"பொது மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள், தேவைகள் குறித்து தி.மு.க கழக நிர்வாகிகளிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள். குறிப்பாக இப்பகுதியில் உள்ள பெட்டை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் குளம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை நீர் கொள்ளளவு மிகக் குறைந்த அளவே பிடிக்கிறது.

திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மா.சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு

மேலும் நிலத்தடி நீர் மட்டமும் மிகக் குறைவாகவே உள்ளதால் ஒரு போகம் மட்டுமே விவசாயப் பயிர்கள் விளைவதாக, விவசாயிகள் பொது மக்களிடத்தில் குறை கேட்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் நிறைவேற்றித் தருவதாக கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் திமுகவிற்கேவாக்களிக்க தயாராக உள்ளனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details