தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அர்ஜூனா விருது பெறும் தூத்துக்குடி பாடி பில்டர் - அர்ஜூனா விருது பெறும் தூத்துக்குடி பாடி பில்டர்

தூத்துக்குடி: எட்டயபுரத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் என்பவருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

arjuna award

By

Published : Aug 21, 2019, 6:06 AM IST

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை செய்து விருதுக்கு தகுதியான வீரர்களின் பட்டியலை தயார் செய்தது. இதில் விருதுகள் பெறும் வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அர்ஜூனா விருது பெறவுள்ளோரின் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இது தவிர சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருது விமல் குமார் (பேட் மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகந்தர் சிங் (தடகளம்), ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது மெஸ்பான் படேல் (ஹாக்கி), சஞ்ஜய் பரத்வாஜ் (கிரிக்கெட்), ரம்பீர் சிங் (கபடி) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இதில் அர்ஜூனா விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த உடற்கட்டு விளையாட்டு வீரர் எஸ்.பாஸ்கரன் பெயரும் இடம்பெற்றுள்ளது. விளையாட்டுத்துறையில் இந்த ஆண்டு தேசிய விருது பெறும் ஒரே தமிழ்நாட்டு வீரர் என்ற பெருமையும் பாஸ்கரனுக்கு கிடைக்கிறது. 65 கிலோ எடைப்பிரிவில் உலக உடற்கட்டு வீரர் பட்டம் வென்றவர். 60 கிலோ எடைப்பிரிவில் ஆசியா உடற்கட்டு வீரர், அதற்கு முன்னதாக ஐந்து முறை இந்திய உடற்கட்டு வீரர் பட்டங்களை வென்றவர்.

கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடற்கட்டு வீரர் (ஆணழகன்) பட்டம் வென்றவர். பன்னாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகவும், இந்தியா சார்பாகவும் களம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரனின். சென்னை ஐ.சி.எஃப் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளனர். சென்னையில் அரசுப் பள்ளியில் தன் வாழ்க்கையைத் தொடங்கி விளையாட்டின் மீதான ஆர்வத்தில் இருபது ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

தனக்கு கிடைக்கப் போகும் அர்ஜூனா விருது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் என பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பாடி பில்டிங் வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும், போட்டிகளில் பங்கேற்கும் முன்பாகவே வீரர்களை ஊக்கப்படுத்த அரசு முன்வரவேண்டும். மத்திய அரசு விருது அறிவித்தது போல, மாநில அரசும் பாடி பில்டிங் வீரர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details