தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். மத்திய அரசின் உத்தரவின்படி காற்று, நீர், ஒலி மாசுகளைக் கட்டுபடுத்துவது குறித்த விழிப்புணர்வை, பள்ளி மாணவ மாணவியர்கள் மூலமாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!
தூத்துக்குடி: சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
environment awarness rally in thoothukudi
தூத்துக்குடியில் இன்று 500க்கும் மேற்பட்ட தேசிய பசுமைப் படையினர் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய சாலை வழியாகப் பேரணியாகச் சென்றனர். இப்பேரணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க:'கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தரமற்ற சாலை' - மக்கள் வாக்குவாதம்