தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அதிமுக அமைச்சர்களின் பொழுதுபோக்கே பணம் கொடுப்பதுதான்’ - கேஎஸ் அழகிரி - தேர்தல்

தூத்துக்குடி: அதிமுக அமைச்சர்களின் பொழுதுபோக்கே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

ks-alagiri

By

Published : Oct 3, 2019, 5:52 AM IST

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், நாங்குநேரி இடைத்தேர்தலில் எங்களுடைய வேட்பாளர் ரூபி மனோகரனை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து வைக்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுக அமைச்சர்களின் பொழுதுபோக்கே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுதான். அதுதான் அவர்களுடைய தேர்தல் பணி. அதிமுகவினர் அவர்களின் கொள்கையை சொல்லி பரப்புரை பண்ண முடியுமா அல்லது அவர்கள் இதுவரை செய்திருக்கின்ற சாதனைகளை சொல்லிதான் பரப்புரை பண்ண முடியுமா?. பணத்தை வைத்துதான் அவர்கள் பரப்புரை செய்ய முடியும்.

கேஎஸ் அழகிரி செய்தியாளர் சந்திப்பு

சென்னை ஐ.ஐ.டி.யில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் நேரலை செய்யாததற்காக வசுமதி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், அது கண்டிக்கதக்கது. தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலை செய்கின்ற அளவுக்கு பலம் இல்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:'ட்ரம்பிற்கு இந்திய நாட்டின் வரலாறு தெரியாததால் மோடியை புகழ்ந்துள்ளார்' - கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details