தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டியில் பாஜக நிர்வாகி வீட்டில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை! - முக்கிய ஆவணம் சிக்கியதா?

கோவில்பட்டியில் பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் வீட்டில் 12 மணி நேரமாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 24, 2023, 10:09 AM IST

பாஜக நிர்வாகி வீட்டில் 12 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை

தூத்துக்குடி: பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் சிவந்தி நாராயணனன் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள், சொத்து முதலீடு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜூவ் நகர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி செயலாளர் சிவந்தி நாராயணன் என்பவர் வீட்டில் மதுரை அமலாக்கத் துறை பிரிவின் பெண் அதிகாரி உள்பட மூன்று அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் நேற்று காலை 8 மணி அளவில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுமான ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏறத்தாழ 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் கட்டுமான பணி ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள், சொத்து முதலீடு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், அமலாக்க பிரிவு அதிகாரிகள் தரப்பில் சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இதுகுறித்து பேசிய சிவந்தி நாராயணன், காலை 8:00 மணியளவில் அமலாக்கத்துறை சோதனை குறித்து தகவல் தெரிய வந்ததாகவும், தனது மனைவி வீட்டில் இருந்த நிலையில், தான் வெளியூரில் இருந்து வீடு திரும்பினேன் என்றும் தெரிவித்தார். பின்னர், எனது போனை ஆய்வு செய்ததாகவும், வீட்டில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்ததாகவும் கூறினார். தனது ஸ்ரீ சிவந்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"திமுக அரசு விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது" - பி.ஆர் பாண்டியன் ஆவேசம்!

பின்னர், அமலாக்கத்துறையினர் சோதனை செய்வதற்கான வாரண்ட்டை காண்பித்ததை அடுத்து, சோதனை செய்து கொள்ளுங்கள் எனக் கூறியதாக தெரிவித்தார். மேலும், சில ஆவணங்களின் நகல்களை எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார். சாரல் இந்தியா குரூப்ஸ் என்ற நிறுவனம் கன்ஸ்ட்ரக்ஸன் வேலை, மார்க்கெட்டிங் உள்ளிட்டவைக்கான கம்பெனி நடத்தி வருவதாகவும், தற்போது இந்த சோதனையானது ஐஎச்எஃப்எல் நிறுவனம் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் இங்கு சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, அந்த நிறுவனத்துடன் தொடர்பு இருந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்துடன் தமக்கு தொடர்பில்லை என்றும் அவர் கூறினார். மேலும், அந்த நிறுவனத்தில் இருந்து தனக்கு பணம் வரவேண்டியது உள்ளிட்ட விவரங்களை நான் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்த சோதனையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்படும் என்றும் அதன்படி, விசாரணைக்காக சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

ABOUT THE AUTHOR

...view details