தூத்துக்குடி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையத்தில் சிஐடியு மின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அனல் மின் நிலைய நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனல் மின் நிலைய ஊழியர் சிஐடியு சங்க தலைவர் அப்பாதுரை தலைமை தாங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாதுரை கூறுகையில், "ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தூத்துக்குடியில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலைக்கு ஏற்றவாறு சம ஊதியம் வழங்க வேண்டும். 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அனல் மின் நிலையத்தில் இன்றுவரை நிரந்தர பணியாளர்கள் என யாரும் பணிக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
அனல் மின்நிலையம் மேல்முறையீடு
இதனை எதிர்த்து சிஐடியு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டுமெனவும், நிரந்தர பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.