தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ரூ.67.96 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை - தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.67.96 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Election Flying squad  seizes Rs 67.96 lakh in Thoothukudi
Election Flying squad seizes Rs 67.96 lakh in Thoothukudi

By

Published : Mar 12, 2021, 8:05 PM IST

தூத்துக்குடி:தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட அளவு தொகைக்கு மேல் கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயமாகிறது. இதனைக் கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் பீங்கான் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வீரபாகு தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் உரிய ஆவணங்களின்றி 67 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்தப்பணத்தை பறிமுதல் செய்து தூத்துக்குடி வட்டாட்சியரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து வந்தவர் செயின்ட் பீட்டர் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர் அருள் ராஜா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும்: அமைச்சர் கடம்பூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details