தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 76.43 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
கோவில்பட்டியில் 67.42 விழுக்காடு வாக்குகளும், ஓட்டப்பிடாரத்தில் 69.82 விழுக்காடு வாக்குகளும், தூத்துக்குடியில் 65.04 விழுக்காடு வாக்குகளும், திருச்செந்தூரில் 69.96 விழுக்காடு வாக்குகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 72.34 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.