தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வசவப்பப்புரம், வல்லநாடு, செக்காரக்குடி, சவலாபேரி, ஒட்டநத்தம், ஓசனூத்து உள்ளிட்ட பகுதிகளில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் நேற்று ஈடுபட்டார்.
பரப்புரையின் போது பிறந்த நாள் கொண்டாடிய முதலமைச்சர் - பிறந்த நாள் கொண்டாடிய
தூத்துக்குடி: தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
செக்காரக்குடிக்கு வருவதை அறிந்த அக்கட்சியினர் முதலமைச்சர் பிறந்த நளை கொண்டாடும் வகையில் கேக் வெட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதில் கலந்து கொண்ட அவர் கேக் வெட்டி தொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடினார். இது அக்கட்சியின் தொண்டர்களிடேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.