துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரம் குளத்தூள்வாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் அய்யலுசாமி (55). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவருகிறார்.
கொத்துக்கொத்தாக செத்துக்கிடந்த ஆடுகள்! கதறி அழுத உரிமையாளர் - குளத்தூள்வாய்பட்டி
துாத்துக்குடி: கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து 11 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இவர் இன்று வழக்கம் போல ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பலத்த மழை பெய்ததால், அய்யலுசாமி ஆடுகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவர் நிலம் அருகே வந்தபோது, அங்கிருந்த மின்மாற்றியில் இருந்து மின் கம்பத்திற்கு செல்லும் வயர் திடீரென அறுந்து ஆடுகள் மீது விழுந்தது.
இதனால் சம்பவ இடத்திலேயே 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அய்யலுசாமியின் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. ஆடுகள் இறந்ததைப் பார்த்து அய்யலுசாமி கதறி அழுதார்.