தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி அனல்மின் நிலைய 5ஆம் அலகில் டர்பன் பழுது நீக்கம் - thoothukudi district news

தூத்துக்குடி : அனல்மின் நிலைய 5ஆம் அலகில் டர்பன் பழுது நீக்கம் செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

அனல்மின் நிலைய 5-ம் அலகில் டர்பன் பழுது நீக்கம்
அனல்மின் நிலைய 5-ம் அலகில் டர்பன் பழுது நீக்கம்

By

Published : Nov 24, 2020, 7:42 PM IST

தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. ஐந்து அலகுகளைக் கொண்ட அனல் மின் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு அலகும், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாகும்.

மொத்தம் 1,040 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் ஒன்று, இரண்டாம் அலகுகளில் தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மூன்று, நான்கு, ஐந்தாவது அலகுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டாக டர்பன் பழுது காரணமாக ஐந்தாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது ஐந்தாவது அலகில் பழுது நீக்கம் செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 6 மாதத்திற்குப் பிறகு இயங்கும் அனல்மின் நிலையம்?

ABOUT THE AUTHOR

...view details