தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (டிசம்பர் 22) கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி, சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் என்று சவால் விட்டிருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிப்பாடு தான்.
எடப்பாடி தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுக்குழுவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளது. பாஜக அதிமுகவுடன் தான் கூட்டணி என்று கூறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக.