தூத்துக்குடி:இன்று காலை நிலவிய கடுமையான பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 6.20 மணிக்கு 39 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தூத்துக்குடி விமானநிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
தூத்துக்குடியில் கடும் பனி மூட்டம் - திருப்பிவிடப்பட்ட விமானம் - பனிமூட்டம்
தூத்துக்குடியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டது.
Etv Bharatதூத்துக்குடியில் கடும் பனி மூட்டம் - திருப்பிவிடப்பட்ட விமானம்
இதுபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்குச் செல்ல விமானம் வராததால் 49 பயணிகள் தூத்துக்குடி விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடும் பனிப் பொழிவு காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க:6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல்