தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைக்கேறிய மது போதை: நண்பனை அடித்துக் கொன்றவர் கைது! - murder

மது அருந்துகையில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, மாரீஸ்வரன், மாரியப்பனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாரீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 5 மணி நேரத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

drunken man killed his friend in thoothukudi
drunken man killed his friend in thoothukudi

By

Published : Dec 19, 2020, 6:30 PM IST

தூத்துக்குடி: மது போதையில் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓட்டபிடாரம், முப்பிலிபட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 51) என்பவர், முத்தையாபுரம் பகுதியில் நடமாடும் பஞ்சர் பார்க்கும் வாகனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இன்று (19.12.2020) முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்குகாடு, மதுரை பைபாஸ் சாலை அருகே, அவர் வேலை பார்க்கும் வாகனத்திலேயே அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு இறந்துகிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய காவலர்கள், விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்தராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தனிப்படையினர் தூத்துக்குடி கேம்ப்-1, வடக்கு தெருவை சேர்ந்த மாரீஸ்வரன் (37) என்பவரை தெர்மல் பவர் பிளான்ட் அருகே வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலையான மாரியப்பனும், மாரீஸ்வரனும் நண்பர்கள் என்பதும், மது அருந்துகையில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, மாரீஸ்வரன், மாரியப்பனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாரீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 5 மணி நேரத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details