தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (38) மெரைன் இன்ஜினியர். இவரது நண்பர், பிரையண்ட் நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த விவேக் (38). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
'ஏம்ப்பா இவ்வளவு ஸ்பீடா வர்றீங்க...!' - தட்டிக்கேட்ட இருவர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி : சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதற்கு இரண்டு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
இவர்கள் இருவரும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தாகுளம் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலையான இருவர் தட்டிக்கேட்டதாகவும் தெரிகிறது. இதற்காக இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.