தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிள்ளையார் கோயிலை இடிக்க கூடாது - திமுக எம்.எல்.ஏ சாலை மறியல் - தூத்துக்குடியில் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடி: வாறுக்கால் அமைப்புப் பணிக்காக பிள்ளையார் கோயிலை இடிக்க கூடாது என திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுக எம்.எல்.ஏ சாலை மறியல்
திமுக எம்.எல்.ஏ சாலை மறியல்

By

Published : Nov 18, 2020, 10:51 AM IST

Updated : Nov 18, 2020, 1:25 PM IST

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சுமார் 6 அடி அகலமுள்ள வாறுகால் அமைக்கப்பட்டு வருகிறது.

வாறுகால் அமைக்கப்படும் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் இடையூறாக உள்ளதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் கோயிலை அகற்ற முடிவு செய்து இன்று (நவ.18) காலை ஜே.சி.பி இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனர்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன், அக்கட்சித் தொடர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன் சாலைமறியல்

கோயில் அகற்றப்படாது என உறுதி அளித்தப் பின்னரே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தார். இதனை அடுத்து, தொலைப்பேசி வாயிலாக எம்.எல்.ஏகீதா ஜீவனிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், வாறுகால் அமைக்கப்படும் போது ஆலயத்தை அகற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:நடிகையின் வீட்டில் செல்போன் திருட முயன்றவர் கைது

Last Updated : Nov 18, 2020, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details