தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக! - Tamil news

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சண்முகையா வெற்றி பெற்றுள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வெற்றி
Ottapidaram constituency DMK Party won

By

Published : May 3, 2021, 9:59 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சண்முகையா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மோகனை விட 8 ஆயிரத்து 510 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 717 வாக்காளர்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், திமுக வேட்பாளர் சண்முகையா 73 ஆயிரத்து 110 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மோகன் 64 ஆயிரத்து 600 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வைகுண்டமாரி 22 ஆயிரத்து 413 வாக்குகளும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்ட ஆறுமுக நயினார் 5327 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி 6,544 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 86 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுகவை தோற்கடித்து திமுக வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'திமுக இந்துக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரானது'

ABOUT THE AUTHOR

...view details