தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி தொகுதியை இரண்டாம் முறை தக்கவைத்த திமுக! - தமிழ் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கீதாஜீவன் 50 ஆயிரத்து 310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வெற்றி
DMK party win

By

Published : May 3, 2021, 10:25 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதியில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கீதாஜீவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயசீலனை விட 50 ஆயிரத்து 310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 838 வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருந்தன.

இதில் திமுக வேட்பாளர் கீதாஜீவனுக்கு 92 ஆயிரத்து 314 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் விஜயசீலனுக்கு 42 ஆயிரத்து 004 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜூக்கு 30 ஆயிரத்து 937 வாக்குகளும், தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரனுக்கு 4 ஆயிரத்து 40 வாக்குகளும், மநீம சார்பில் போட்டியிட்ட சுந்தர் 10 ஆயிரத்து 534 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 286 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது.

கடந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை திமுக வென்றிருந்த நிலையில் தொடர்ந்து இரண்டாம் முறையாக இம்முறையும் தூத்துக்குடி தொகுதியை திமுக கைப்பற்றி வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோட்டையும் நமதே... மலைக்கோட்டையும் நமதே! 'அதற்கும்' தயாராகும் கே.என். நேரு!

ABOUT THE AUTHOR

...view details