தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய திமுகவினர்! - selvi sandhanam

தூத்துக்குடி: கோவில்பட்டி, புதூர் பகுதிகளில் கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

dmk
dmk

By

Published : Apr 22, 2020, 12:18 PM IST

Updated : Apr 22, 2020, 12:25 PM IST

ஒட்டுமொத்த உலகையே தனது கோரப்பிடிக்குள் சிக்கவைத்த கரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளனர். ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் எனப் பலரும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்கின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்திற்குள்பட்ட பூரணம்மாள் காலனி, லாயல் மில் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தானம் ஏற்பாட்டில் ஐந்து கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் சுமார் 100 கிலோ அரிசியை மக்களுக்கு இவர் வழங்கிவருகிறார்.

கோவில்பட்டி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய திமுகவினர்!

இதேபோல விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மும்மூர்த்தி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், திமுக பிரமுகர் ரவி ஆகியோர் இணைந்து, புதூர், நாகலாபுரம், வெம்பூர் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 250 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் காய்கறி, முகக்கசவம், சோப் உள்ளிட்ட பொருள்களை வழங்கினர்.

இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக சார்பில் 'பிரியாணி' விருந்து!

Last Updated : Apr 22, 2020, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details