தூத்துக்குடி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மேயர் ஜெகன் முன்னிலையில், திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழா மேடையில் எம்.பி ஆ.ராசா பேசியதாவது, "எல்ஐசியில் மக்கள் போடும் பணத்தை பல லட்சம் கோடி அதானியிடம் முதலீடு செய்தார் மோடி. அதே போல் ஓஎன்ஜிசி, பெட்ரோலிய நிறுவனங்கள் பல லட்சம் கோடி பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்கின்றனர். இதற்கு மோடி அவர்களை அரசு விமானத்தில் பல வெளிநாடுகளுக்கு கூட்டி சென்று அந்நாட்டில் பேசி ஒப்பந்தம் கையெழுத்தாகி அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக அதானிக்கு கார்ப்பரேட் மதிப்பு கூடுகிறது. இதற்கு பிறகு உலக அளவில் முதல் பணக்காராக மோடியால் அதானி வருகிறார் என கடுமையாக சாடினார்.
தொடர்ந்து பேசிய ஆ.ராசா, மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரனாக மாறுகிறார். அவர் என்ன செய்தார் என்று ஹிண்டன்பர்க் என்ற உளவுத்துறை நிறுவனம் வெளியே கொண்டு வந்தது. அதானி பங்குகளை அதிகமாக காட்டி, ஒரு பெரிய பிம்பத்தை இந்தியாவில் உருவாக்கினார். மேலும், கணக்குகளில் மோசடி செய்துள்ளார் என்று வெளிநாட்டில் உள்ள நிறுவனம் செல்கிறது. அந்த நிறுவனத்தின் மீது வழக்கு போட திரானி இல்லை. இது குறித்து மோடியிடம் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை என்று விமர்சித்தார்.