தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென திண்ணை பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் - Dmk leader

தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் திடீரென திண்ணை பரப்புரையில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

By

Published : Apr 30, 2019, 7:19 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி உட்பட 4 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகிற மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நான்கு தொகுதிகளில் அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக சண்முகையா போட்டியிடுகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி, கீழ தட்டப்பாறை, மேல தட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்த ஸ்டாலின் திடீரென திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். மேலும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள குறைகளை ஸ்டாலினிடம் தெரிவித்த மக்கள், குடிநீர் பிரச்னை, வடிகால் பிரச்னை மற்றும் குளம்தூர் வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டுமென வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details