திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று இரவு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கு ஆரத்தி எடுத்ததற்கு, தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் வழங்கியதாக அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை உள்ளிட்ட 4 பேர் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பொய்யான புகார்.