தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டாம்கட்ட பரப்புரைக்காக தூத்துக்குடிக்கு வருகை தந்த ஸ்டாலின்! - தூத்துக்குடி விமான நிலையம்

தூத்துக்குடி: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தனது இரண்டாம்கட்ட பரப்புரையை மேற்கொள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.

MK Stalin

By

Published : Oct 14, 2019, 9:21 PM IST

அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கிற நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாம்கட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வருகை தந்தார்.

அங்கு அவரை வரவேற்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, திண்டுக்கல் ஐ. பெரியசாமி, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் என பலர் வந்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து காரில் தனியார் விடுதிக்குச் சென்று சில மணிநேர ஓய்விற்குப் பின் அங்கிருந்து அவர், நாங்குநேரி தேர்தல் பரப்புரைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க:

நாங்குநேரி பரப்புரை - தூத்துக்குடிக்குச் சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details