தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, இந்திரா நகர், பிள்ளையார் கோவில், ஐயப்பன் நகர், விஷ்வபுரம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஒட்டப்பிடாரத்தில் கனிமொழி தீவிர பரப்புரை..! - kanimozhi
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, திமுக எம்.பி. கனிமொழி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தேர்தல் பரப்புரை
அவருடன், வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் இந்த தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டனர்.