தூத்துக்குடி மாவட்டம் குரூஸ் பர்னாந்து சிலை அருகே தேமுதிக, அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பரப்பரை மேற்கொண்டார்.
'இலவசங்களை வழங்கி மக்களை முட்டாளாக வைத்துள்ளனர்' - விஜயபிரபாகரன் காட்டம் - Vijayaprabhakaran's speech in Thoothukudi
தூத்துக்குடி: "இலவசங்களை வழங்கி மக்களை முட்டாளாக வைத்துள்ளனர். அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களின் பின்னால் மிகப் பெரிய மூலதனம் இருக்கும்" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் விஜயபிரபாகரன் பரப்புரை
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மாற்றம் என்பது நிச்சயமாக ஏற்பட வேண்டும். இரண்டு பெரிய கட்சிகளும் மாறி மாறி மக்களுக்கு இலவசங்களை அறிவித்துள்ளன. இலவசங்களை வழங்கி மக்களை முட்டாளாக வைத்துள்ளனர். இலவசங்களை அறிவித்த கட்சிகள் வேலை வாய்ப்புகளைப் பற்றி சிறிதும் யோசிக்கவில்லை.
இதை மக்கள் சிந்திக்க வேண்டும். தேமுதிக - அமுமுக கூட்டணி மாற்றத்திற்கான கூட்டணி. இந்த கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.