சொத்துக்குவிப்பு வழக்கில், வி.கே. சசிகலா, அவரது உறவினர்கள் பெயரில் உள்ள சொத்துகளை அரசு பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது.
தொடரும் இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பறிமுதல்: தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு! - இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பறிமுதல்
13:13 February 09
தூத்துக்குடி: இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்குவதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி இன்று, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உள்பட்ட கால்வாய், சேரகுளம், வல்லகுளம் ஆகிய மூன்று கிராமங்களிலும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 800 ஏக்கர் ரிவர்வே அக்ரோ புராடெக்ஸ் பிரைவேட் லிமிடெட் இடத்தையும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு உள்பட்ட மீரான்குளம் கிராமத்தில் உள்ள 250 ஏக்கர் இடத்தையும் அரசுடமையாக்கும் பணிக்காக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சாத்தான்குளம் தாசில்தார் லட்சுமி கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, தஞ்சையை தொடர்ந்து தற்போது தூத்துக்குடியில் இளவரசி, சுதாகரனின் சொத்துகளும் தமிழ்நாடு அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:அரசுடைமையான இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புடைய நிலங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!