தூத்துக்குடி:தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறைக்குப் பின் ஜூன் மாதம் வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பபடும். இந்த நிலையில், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பள்ளி பேருந்துகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில், பள்ளிப் பேருந்துகளில் வேக கட்டுப்பாடு கருவி, கண்காணிப்பு கேமரா, அவசர வழி உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளிப் பேருந்துகளில் மாணவ, மாணவிகளை பாதுகாப்பான முறையில் அழைத்து வரவும், மாணவர்கள் பேருந்துகளில் ஏறிய பின்பு தான் பேருந்து இயக்க வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு எடுத்துரைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு கல்வி ஆண்டும் தொடங்குவதற்கு முன்னர் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்து வழக்கம். அதைப்போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்துகளை ஆய்வு செய்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், சார் ஆட்சியர், கோட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் பேருந்துகளை ஆய்வு செய்து வருகிறோம். தூத்துக்குடி மாநகரில் 169, திருச்செந்தூரில் 200, கோவில்பட்டியில் 269 இந்த வாகனங்கள் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு நடைபெறுகிறது.