தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கி பணியிடங்களுக்கான தேர்வு புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள 30 காலி உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இப்பணியிடத்திற்கு 495 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். 298 நபர்கள் தேர்வு எழுத வருகை தந்துள்ளனர்.
நாளை கூட்டுறவு சங்கங்களின் உதவியாளர் பணியிடங்களுக்கான 66 காலியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் பதிவாளர் மேற்பார்வையில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு (டிசம்பர் 4) மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இங்கு ஏற்கனவே மாநகராட்சியினர் டீசல் பம்புகள் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.